Politics. Education. Community Work

சென்னையைச் சேர்ந்த லட்சுமி ராமச்சந்திரன், தமிழ்நாடு காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மற்றும் பொதுச் செயலாளர். பொதுக் கொள்கை, சமூகப் பணி, மேம்பாடு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சுதந்திர இந்தியா உருவாவதற்குக் காரணமான நம் பெரும் தலைவர்களின் கனவை நனவாக்குவது லட்சுமியின் நோக்கம். அக்கனவின் இலக்குகளான - சமூக நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை, அனைவருக்குமான மேம்பாடு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் தரும் ஒரு இந்தியாவை உருவாக்குவதைச் சார்ந்தே லட்சுமியின் அரசியல் பணி தொடர்கிறது.
லட்சுமி ஐஐடி சென்னையில் (IIT Madras) கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வி மற்றும் தொழில்நுட்ப துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், தன்னார்வ நிறுவனங்களிலும் பல ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். பணி நிமித்தமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்.
இணைய யுகத்தில் வளர்ந்து வரும் இரண்டு சிறுமிகளின் தாயாக, அவர்களின் வளர்ச்சி தினந்தோறும் அவருக்கு ப்ரமிப்பையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.



























